செங்கோட்டை-மதுரை ரயில்; இனிமே பயணிகளுக்கு ஜாலி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 2, 2022

செங்கோட்டை-மதுரை ரயில்; இனிமே பயணிகளுக்கு ஜாலி!

செங்கோட்டை-மதுரை ரயில் பயணிகள் இனி ஜாலியாக பயணிக்கலாம் என்கிற செம ஹேப்பியான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டு இருந்தது.

இதன் பிறகு கொரோனா நோய் பரவல் நாளடைவில் வெகுவாக குறைந்ததை அடுத்து முழு ஊரடங்கு உத்தரவு அதிரடியாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்து மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளது.
அந்தவகையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் பொதுமக்கள் வசதிக்காக மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னதாக நாள்தோறும் செங்கோட்டை-மதுரை இடையே 3 பயணிகள் ரயில் காலை 7 மணி, 11 மணி, 5 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது.

இதனால் செங்கோட்டை, தென்காசி, கடைய நல்லூர், பாம்பு கோவில்சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் அவற்றை சுற்றி உள்ள கிராம மக்கள் பயன்பெற்று வந்தனர்.
தற்போது பொது போக்குவரத்து தொடங்கி இருக்கும் நிலையில் இந்த பயணிகள் ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த சூழலில் பயணிகள் கோரிக்கைகளை ஏற்ற ரயில்வே நிர்வாகம் தற்போது படிப்படியாக ரயில் சேவையை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில், திருச்சி - மானாமதுரை - திருச்சி, நெல்லை - நாகர்கோவில் - நெல்லை, செங்கோட்டை - மதுரை - செங்கோட்டை ரயில்களுக்கு மீண்டும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று 1ம் தேதி முதல் மதுரை - செங்கோட்டை விரைவு ரயில் வண்டி எண்: 06662/06665 முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவையை பயணிகள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad