அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, பெரியாயிபாளையத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில், அரசின் &'நான் முதல்வன்&' திட்டத்தின் கீழ், உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி பயிற்சி வழங்கப்பட்டது.
பள்ளி உதவி தலைமையாசிரியை சுமித்ரா, தலைமை வகித்தார். ஆசிரியர்கள் மணிகண்டன், சசிகுமார், சங்கரராஜா, கந்தசாமி, விஜயலட்சுமி ஆகியோர் பயிற்சி வழங்கினர்.
எந்தெந்த கல்வி படிப்பதின் மூலம் எந்த வகையான வேலை வாய்ப்புகளை பெற முடியும் என்பது குறித்து அவர்கள் விளக்கினர், மாணவ, மாணவியர், பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.
No comments:
Post a Comment