கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், தொழில் நுட்பம் மற்றும் தொழில் முறை சார்ந்த முதல் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு, பாரத பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், மாணவருக்கு ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய், மாணவியருக்கு, ஆண்டுக்கு, 36 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, பிளஸ் 2 பாடப்பிரிவில், 60 சதவீதம் மதிப்பெண் பெற்ற தகுதி உள்ள முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், கல்வி உதவித்தொகை பெற, www.ksb.gov.in என்ற இணையதளம் மூலம், (2021-2022) கல்வி ஆண்டுக்கு விண்ணப்பம் செய்ய, கடந்த மார்ச் 31ம் தேதியுடன், முடிந்த நிலையில், வரும், 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதனால், (2021-2022)ம் நிதி ஆண்டுக்கு, வரும், 15ம் தேதிக்குள் விண்ணப்பித்து, அவற்றை பதிவிறக்கம் செய்து, மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, உதவி இயக்குனர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286 -233079 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment