'தமிழகத்தில் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு கணினி கட்டணம் ரூ.200 ரத்து செய்யப்படும்&' என கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளதை ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.
தமிழ்நாடு மேல்நிலை தலைமையாசிரியர் கழகம் மாநில தலைவர் ரமேஷ் கூறுகையில், "கணினி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், அவுட் சோர்சிங் முறையில் அடிப்படை பணியாளர்களை நியமிக்க வேண்டும் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.,11ல் ஐந்து மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் 2 கோரிக்கைகள் ஏற்கப்பட்டது வரவேற்கத்தக்கது. விரைவில் அனைத்தையும் ஏற்க வேண்டும்" என்றார்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் மாநில தலைவர் செல்வக்குமார் கூறுகையில், "தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் கொண்டுவரப்பட்டது.
இதன் பலனாக உலகளவில் பல லட்சம் மாணவர்கள் இத் துறையில் சாதிக்கின்றனர். மாணவரிடம் வசூலித்த ரூ.200 ரத்து தற்போது செய்யப்பட்டதால் கணினி பிரிவில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்," என்றார்.
No comments:
Post a Comment