இத்தாலியில் ஆபாச நடிகையை கொன்று உடல் பாகங்களை துண்டுகளாக வெட்டி குப்பை தொட்டியில் வீசிய புகைப்பட கலைஞரை காவல்துறை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியின் லோம்பார்டியில் உள்ள மெட்ரோபொலிட்டன் நகரமான ரெஸ்கால்டினாவில் வசித்து வந்தவர் கரோல் மால்டெசி (36). இவர் சில மாதங்களுக்கு முன்பு இத்தாலியில் உள்ள வாசனை திரவியக் கடையில் விற்பனை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் இவரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் வருமானத்திற்கான வழியை மாற்றிக்கொண்டு OnlyFans என்ற இணையதளத்தில் ஆபாச வீடியோக்களை போட தொடங்கினார்.
அதன் மூலம் பிரபலமான கரோல் மால்டெசிக்கு உலக ஆபாச நெட்வொர்க்கில் பல வாய்ப்புகள் குவிந்தது. பல மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாக படுத்தி வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் 11-13 வரை மிலானோவில் உள்ள லக்ஸி கிளப்பில் நடிகையின் லக்ஸி எரோடிக் ஃபெஸ்டிவல் 2 நிகழ்ச்சி நடத்தப்படவிருந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் கரோல் மால்டெசி பங்கேற்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பல சந்தேகங்களை கிளப்பியது. ரசிகர் ஒருவரின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கரோல் மால்டெசியை தேடி வந்தனர்.
இந்நிலையில், மார்ச் 20ஆம் அன்று லோம்பார்டியில் உள்ள பாலின் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு மலைப்பகுதியில் பல துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் மால்டெசியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், நடிகையின் பக்கத்துக்கு தெருவில் வசித்து வந்த புகைப்பட கலைஞரும், யூடியூபருமான டேவிட் ஃபோண்டானா (43) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் விசாரணையை தொடங்கினர்.
அதில், நடிகை மால்டெசியை கடந்த ஜனவரியில் சுத்தியால் அடித்து கொலை செய்துவிட்டு சடலத்தை ஃப்ரீசரில் வைத்திருந்ததாகவும், ஒரு மாதத்திற்குப் பிறகு உடலை பல துண்டுகளாக வெட்டி, தீயிட்டு, சாக்கு பைகளில் அடைத்து அகற்றியதாகவும் ஃபோன்டானா ஒப்புக்கொண்டார். மேலும், நடிகையுடன் நெருக்கமாக பழகி வந்த ஃபோண்டானாவுக்கு காதலி மால்டெசி ஆபாச காட்சிகளில் நடிப்பது பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் மால்டெசியை ஃபோண்டானா சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். மேலும், நடிகையை கொன்றுவிட்டு அவரது செல்போனை பயன்படுத்தி வந்த ஃபோண்டானா, செல்போனுக்கு வரும் மெசேஜ்களுக்கு நடிகையை போலவே ரிப்ளை செய்து வந்ததால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை எனவும் விசாரணையில் தெரிய வந்தது. தற்போது ஃபோண்டானாவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
No comments:
Post a Comment