காதலர்களுக்குள் ஏற்பட்ட மோதலை தடுக்க வந்த உணவு டெலிவரி செய்யும் நபர் இளம்பெண்ணை அடித்து தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் பகுதியில் உள்ள பூங்காவின் வெளியே பெண் ஒருவர் அவர் தனது காதலனை கல் எறிந்து அடித்து தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. வீடியோ குறித்து ஆராய்ந்ததில், அந்த பெண்ணுக்கும் காதலனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் ஆத்திரமடைந்த இளம்பெண் அந்த இளைஞரை வாகனங்கள் செல்லும் சாலையில் வைத்து அடித்து தாக்கியுள்ளார்.
அப்போது, அவ்வழியே வாகன ஓட்டிகள் பலர் சண்டையை வேடிக்கை பார்த்தபடி செல்ல, உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் இளம்பெண்ணை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், அந்த பெண் அந்த வாலிபரையும் தகாத வார்த்தைகளில் திட்டவே, கடுப்பான டெலிவரி நபர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார்.
காதலியிடம் அடி வாங்கிய காதலன் பொறுமையாக இருந்த நிலையில், சமாதானம் செய்ய வந்த வாலிபரை வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு அடி வாங்கிய பெண் நிலைகுலைந்து போனார்.
இந்நிலையில், சம்பவம் குறித்து போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இளம்பெண் தாக்கப்படும் சம்பவத்தின் வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment