அனைத்து மாவட்டங்களிலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது உத்தரமேரூர் எம்எல்ஏ கே.சுந்தர் (திமுக) எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சி.வி.கணேசன் பதிலளித்துப் பேசியதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி தமிழகத்தில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு விரைவில் வேலைவாய்ப்பை உருவாக்குவோம். இன்னும் இரண்டு மாதங்களுக்குள். இதே போன்று தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியில் வரும் 10ம் தேதியும், மதுரை மாவட்டத்தில் 30ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பெரம்பலூர் ஆகிய இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம்,'' என்றார்.
* இன்று சட்டப்பேரவையில்...
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். விவாதத்தைத் தொடர்ந்து, மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.
No comments:
Post a Comment