JEE நுழைவு தேர்வு நாளை முதல் விண்ணப்பம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 9, 2022

JEE நுழைவு தேர்வு நாளை முதல் விண்ணப்பம்

JEE நுழைவு தேர்வு நாளை முதல் விண்ணப்பம்
தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., இரண்டாம் கட்ட பிரதான தேர்வுக்கு, நாளை முதல் விண்ணப்ப பதிவு துவங்க உள்ளது.

பிளஸ் 2 மற்றும் டிப்ளமா இன்ஜினியரிங் முடித்த மாணவர்கள், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ., பிரதான தேர்வு இரண்டு கட்டமாக நடக்கிறது. முதல் கட்ட தேர்வு ஏப்., 21, 24, 25, 29, மே 1 மற்றும் 4ம் தேதிகளில் நடக்கிறது.
இதற்கான 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவு, மார்ச் 1 முதல் ஏப்., 5 வரை நடந்தது.இதையடுத்து, இரண்டாம் கட்ட பிரதான தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, நாளை துவங்க உள்ளது; மே 3 வரை விண்ணப்பிக்கலாம். இரண்டாம் கட்ட தேர்வானது மே 24 முதல் 29 வரை நடக்க உள்ளது. கூடுதல் விபரங்களை, https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad