குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு கணினிவழி போட்டித் தேர்வு - TNPSC - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 9, 2022

குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு கணினிவழி போட்டித் தேர்வு - TNPSC

குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு கணினிவழி போட்டித் தேர்வு - TNPSC
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாது இருந்தது.

தற்போது TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து முதன்முறையாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு கணினிவழி போட்டித் தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய ஐந்து நகரங்களில் மட்டுமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதற்கு மாத சம்பளம் ரூ.56,100 - ரூ.2.05 லட்சம் வரை. 16 பணியிடங்கள் காலியாக உள்ளது.

தேர்வு ஜூலை 19 காலை மற்றும் பிற்பகலில் நடைபெறும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு TNPSC அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.

No comments:

Post a Comment

Post Top Ad