குரூப் 2, 2 ஏ தேர்வுக்கு ராமநாதபுரம் நூலகத்தில் இலவச பயிற்சி
ராமநாதபுரம் மாவட்ட மைய நூலகத்தில் அரசுப் பணியாளா் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட மைய நூலக முதுநிலை நூலகா் செல்லப்பாண்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் மூலம் குரூப் 2, 2 ஏ ஆகியவற்றின் முதல்நிலைத் தேர்வானது வரும் மே 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் பங்கேற்போர் வெற்றிபெறுவதற்காக ராமநாதபுரம் மாவட்ட மைய நூலகமும், திருநெல்வேலி சிவராஜவேல் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனமும் இணைந்து இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளன.
ராமநாதபுரம் மாவட்ட மைய நூலக வளாகத்தில் வரும் 10ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 15 ஆம் தேதி வரையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. இதில் சேர விரும்புவோர் 8778716205 மற்றும் 9486483723 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு பெயா்களைப் பதிவு செய்யலாம். மைய நூலகத்துக்கு நேரில் வந்தும் பெயா்களைப் பதிவு செய்யலாம்.
No comments:
Post a Comment