வேலையில்லா இளைஞர்களே உதவித்தொகைக்கு அழைப்பு - திண்டுக்கல்
திண்டுக்கல்லில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்து 5 ஆண்டுகளாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பித்து வருபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள், தமிழகத்தில் கல்வி முடித்தவர், வேறு எந்தப் பணியிலும் ஈடுபட கூடாது. அரசு, பிற நிதி நிறுவனங்களில் எந்த உதவியும் பெற்றிருக்க கூடாது. விருப்பமுள்ளவர்கள் www.tnvelaivaaippu.gov.in ல் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மே 31 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியானவர்களுக்கு உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும். விபரங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment