காலை 9 மணிக்கு மேல் அனுமதியில்லை - TNPSC
காலை 9 மணிக்கு மேல் அனுமதியில்லை - TNPSC
குரூப்2 எழுதும் தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள்ளாகவே தேர்வு மையத்திற்குள் வந்து விடவேண்டும் என்று TNPSC அறிவித்துள்ளது.
வருகிற 21ம் தேதி குரூப்2 தேர்வுகள் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் நடைபெற உள்ளன.
காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு முடிகிறது. முதன்மை தேர்வுகள் தமிழ்நாட்டில் 32 மையங்களில் நடைபெற உள்ளன. மொத்தம் 32 நகரங்களில் 117 மையங்களில் TNPSC. தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வுகளை ஜெல் பேனா மற்றும் பால் பாயிண்ட் பேனாக்களில் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகளின் முடிவுகள் வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளன. அதனை தொடர்ந்து முதன்மை தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். இந்த தேர்வில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே அடுத்த கட்ட தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
2022ம் ஆண்டுக்கான குரூப்2 மற்றும் 2ஏ தேர்வுகளில் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது. நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு அதிகமாக ரூ.1.35 லட்சம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ம் தேதி தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வினியோகிக்கும் பணி முடிந்துள்ளது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்:
தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்திற்கு வந்துவிட வேண்டும். காலை 9 மணிக்கு பிறகு தேர்வு எழுத வருபவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தேர்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 12.30 மணிவரையில் நடைபெறும். தேர்வு அறையில் 12.45 மணிவரை தேர்வர்கள் அமர்ந்திருக்க வேண்டும்.
இதனால் குரூப்2 தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு தேர்வுக்கு 1 மணி நேரம் முன்பாகவே அதாவது 8.30 மணிக்கே சென்று விட வேண்டும்படியான நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்வது சிறந்தது.
No comments:
Post a Comment