2 வேளை பசும் பால் கொடுத்து நோயாளிகளை பவர்-ஆக்கும் தேனி விவசாயி!
விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட தேனி மாவட்டத்தில் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ஆவின் நிர்வாகத்தால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பால் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வந்தன.
இந்த சூழலில் கொரோனா நோய் பரவலால் டீ கடைகள் அடைக்கப்பட்டதால் போதியளவு தேவை இல்லாததால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பால் தேக்கமடையும் சூழல் ஏற்பட்டது. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கொள்முதல் செய்யப்படாத பாலை விவசாயிகள் வீணாகத் தரையில் கொட்டி வந்தனர்.
அந்த வகையில் தன்னிடம் தேக்கமடையும் பாலை வீணடிக்காமல் அதனை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார் தேனியைச் சேர்ந்த விவசாயி சீனிராஜ்.
இவர் தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அருகே உள்ள பள்ளபட்டியைச் சேர்ந்தவர். இவர் தன்னிடம் தேக்கமடைந்த கறவைப்பாலை வீணாக்காமல் அருகிலுள்ள பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வந்தார். இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட பாலை கொரோனா சிகிச்சை மையங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டது.
அதனை ஏற்ற விவசாயி சீனிராஜ் இலவசமாகவே கொரோனா சிகிச்சை மையங்களுக்குக் கரவை பாலை வழங்கி வருகிறார். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள கொரோனா சித்த மருத்துவச் சிகிச்சை மையங்கள் ஆகியவற்றிற்கு தானே நேரடியாகச் சென்று இரு வேளைகளிலும் இலவசமாகப் பால் வழங்கி வருகிறார்.
இது குறித்து விவசாயி சீனிராஜ் கூறுகையில், “நாளொன்றுக்குக் காலை, மாலை என இரு வேளைகளில் சுமார் 160லிட்டர் வரை எனது பன்னையில் பால் கறக்கப்படும். கொரோனா ஊரடங்கால் இவற்றில் பாதியைத்தான் ஆவின் கொள்முதல் செய்கிறது. எஞ்சிய பால் தேக்கமடையத் தொடங்கியது. பிற பொருட்களைப் போன்று பாலை தேக்கி வைக்க முடியாது. இதனால் வீணாகும் சூழல் ஏற்பட்டது.
எனவே உற்பத்தி செய்த உணவுப் பொருட்களை வீணடிக்காமல் அதனை கொரோனாவால் சிகிச்சை பெற்று வருகின்றேன். இது எனக்கு மனநிறைவைத் தருகிறது” என்றார்
No comments:
Post a Comment