7 மணி நேரமாக கொரோனா பிணத்துக்கு மத்தியில் சிகிச்சை: வேலூரில் அதிர்ச்சி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 21, 2021

7 மணி நேரமாக கொரோனா பிணத்துக்கு மத்தியில் சிகிச்சை: வேலூரில் அதிர்ச்சி!

7 மணி நேரமாக கொரோனா பிணத்துக்கு மத்தியில் சிகிச்சை: வேலூரில் அதிர்ச்சி!


கொரோனா பெருந்தொற்று காரணமாக முன்கள பணியாளர்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் அதிகளவில் பாதிப்பிற்கு ஆளாகி உயிர்களை இழந்து வருகின்றனர். குறிப்பாக இவர்களுக்கான பணிச் சுமையும் மிக அதிகமாகவே காணப்படுகிறது.

மருத்துவர்கள், செவிலியர்கள் வரிசையில் சுடுகாட்டில் தீவிர பணியில் உள்ள பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினர் அங்கிகாரம் ஏதுவுமின்றி இந்த இக்கட்டான காலத்தில் பணிகளைச் செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் வேலூரில் கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் அந்த சடலம் அப்புறப்படுத்தப்படாமல் அதே இடத்தில் 7 மணி நேரமாக இருந்துள்ளது.

அதாவது நமக்குக் கிடைத்த தகவலின்படி வாலாஜாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அதிகாலை 2 மணி அளவில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் பிற நோயாளிகள் தகவல் அளித்துள்ளனர்.


எனினும் குறிப்பிட்ட நோயாளியின் சடலம் மறுநாள்(இன்று) காலை 9 மணியளவில் அகற்றப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad