என்னது ஆசிரியர்கள் சம்பளம் குறைப்பா? முதல்வர் ஸ்டாலினே சொல்லிட்டாரு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 21, 2021

என்னது ஆசிரியர்கள் சம்பளம் குறைப்பா? முதல்வர் ஸ்டாலினே சொல்லிட்டாரு!

என்னது ஆசிரியர்கள் சம்பளம் குறைப்பா? முதல்வர் ஸ்டாலினே சொல்லிட்டாரு!


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முழு சம்பளமும் அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், ஆசிரியர்களின் சம்பளத்தை விட முன்களப் பணியாளர்கள் சிலரின் சம்பளம் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, ஆசிரியர்கள் மற்றும் முன்கள அரசு ஊழியர்களை தவிர இதர அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்து வருகின்றன.

இதுகுறித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் திருச்சியில் செய்தியாளார்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “ஆசிரியர்களுக்கு சம்பளத்தை பாதியாக குறைத்து, கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்துவது குறித்து பள்ளி கல்வித்துறைக்கு அதிக அறிவுறுத்தல்கள் வருகின்றன. இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், கொரோனா நிலவரம் குறித்து இரண்டு நாட்களாக சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சியில் இருந்து சென்னை திரும்புகிறார். அதற்காக திருச்சி விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அரசு ஆசிரியர்களுக்கு ஊதியத்தை பாதியாகக் குறைப்பது குறித்து அரசு பரிசீலிக்கிறது என்பது வதந்தி என்று விளக்கம் அளித்தார். மேலும், பிளஸ்2 தேர்வு குறித்து துறையுடன் கலந்தாலோசித்து அறிவிக்கப்படும் என்றும் அப்போது ஸ்டாலின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad