தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் ஸ்டாலின் முடிவு இதுதான்!
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இரவு 10 முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 1ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால், கடந்த 10ஆம் தேதி வருகிற 24ஆம் தேதி காலை 4 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டது. ஆனால், ஊரடங்கு தளர்வுகளை பயன்படுத்திக் கொண்டு சிலர் சுற்றித் திரிவதால், தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் கட்டுப்பாடு, டீக்கடைகள் திறக்கத் தடை என்பன உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவானது வருகிற 24ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், கட்டுப்பாடுகளை அதிகரித்து ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். எனவே, முதல்வர் ஸ்டாலின் என்ன மாதிரியான முடிவுகளை எடுக்கவுள்ளார் என்று பொது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment