கோவையில் பிரபல உணவகங்களில் கொரோனா ஆபத்து: அதிகாரிகள் சீல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 21, 2021

கோவையில் பிரபல உணவகங்களில் கொரோனா ஆபத்து: அதிகாரிகள் சீல்!

கோவையில் பிரபல உணவகங்களில் கொரோனா ஆபத்து: அதிகாரிகள் சீல்!



கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊரடங்கிற்குப் பின்பு கூட கோவை மாவட்டத்தில் பதிவாகி வரும் கொரோனா பாதிப்பு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நோய்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு நோயாளிகள் அதிகம் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை முன்பு உள்ள உணவகங்களில் அரசின் விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுவதாகவும் இதனால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகளுக்குப் புகார்கள் வந்துள்ளன.

அதனடிப்படையில் இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு உள்ள மூன்றுக்கும் மேற்பட்ட உணவகங்களுக்கு சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசாரின் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad