ஞாயிற்றுக் கிழமை காய்கறிக் கடைகள் திறப்பு: சூப்பர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 28, 2021

ஞாயிற்றுக் கிழமை காய்கறிக் கடைகள் திறப்பு: சூப்பர் அறிவிப்பு!

ஞாயிற்றுக் கிழமை காய்கறிக் கடைகள் திறப்பு: சூப்பர் அறிவிப்பு!இந்நிலையில் வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று நாளை (மே 30) கோயம்பேடு காய்கறி சந்தை வழக்கம் போல் செயல்படும் என்று அங்காடி நிர்வாக குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கின் போது காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், இறைச்சி கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வணிகர் சங்கங்கள் இணைந்து இந்தப் பணிகளை மேற்கொள்கின்றன. இதற்காக கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழம், பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

பகல் 12 மணி வரை இக்கடைகள் செயல்பட வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டி வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று சந்தைக்கு வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை (மே 30) அன்று மார்கெட் வழக்கம் போல் செயல்படும் என்று அங்காடி நிர்வாக குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

“பொது மக்களின் வசதிக்காக தினந்தோறும் தடையின்றி நியாயமான விலையில் காய்கறி, பழம் கிடைத்திடும் வகையில் தற்போது வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகிறோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் பொதுமக்களின் தேவைக்கேற்ப நாளுக்கு நாள் காய்கறி விற்பனை செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வருகிற 30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோயம்பேடு சந்தை வழக்கம் போல செயல்படும்” என்று நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad