தண்ணீரில் மிதந்து வரும் மதுபாட்டில்கள்; தமிழக எல்லையில் சூடுபிடிக்கும் விற்பனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 28, 2021

தண்ணீரில் மிதந்து வரும் மதுபாட்டில்கள்; தமிழக எல்லையில் சூடுபிடிக்கும் விற்பனை!

தண்ணீரில் மிதந்து வரும் மதுபாட்டில்கள்; தமிழக எல்லையில் சூடுபிடிக்கும் விற்பனை!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இது நாளை மறுநாள் காலை 6 மணியுடன் முடிவுக்கு வரும் நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வரும் ஜூன் 7ஆம் தேதி காலை 6 மணி வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். ஏற்கனவே அறிவித்தபடி அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்ந்து நடக்கும்.

மேலும் மளிகை பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், வாகனங்கள் அல்லது தள்ளுவண்டியில் உள்ளாட்சி அமைப்புகள் அனுமதியுடன் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் விரும்பும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும், காலை 7 மணி முதல் 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.


முழு ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் அண்டை மாநில எல்லைப் பகுதிகளில் இருக்கும் மதுக்கடைகளில் இருந்து மதுபானங்களை வாங்கி அவற்றை சட்டவிரோதமாக தமிழகத்திற்கு கொண்டு வந்து விற்று விடுகின்றனர். குறிப்பாக கர்நாடகாவில் தினமும் காலை 12 மணி வரை மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவானது கர்நாடக எல்லையோரம் அமைந்துள்ளது.

இங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கர்நாடக மாநிலத்தின் கோபிநத்தம் இருக்கிறது. இங்குள்ள கடையில் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு, இருமாநில எல்லையில் ஓடும் காவிரியாற்றை பரிசல் மூலம் கடந்து வருகின்றனர். பின்னர் தமிழகத்திற்குள் நுழைந்து எல்லையோர கிராமங்களில் இரண்டு மடங்கு விலை வைத்து மதுபாட்டில்களை விற்று விடுவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவலறிந்த போலீசார், சேலம் எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைத்துள்ளனர். இவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சட்டவிரோத மதுவிற்பனை எல்லையோர கிராமங்களில் ஜோராக நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் போலீசார் தங்கள் தேடுதலை வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad