கொரோனா நிதி வழங்கும் சிறுவர்களுக்கு அற்புத பரிசு; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 28, 2021

கொரோனா நிதி வழங்கும் சிறுவர்களுக்கு அற்புத பரிசு; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

கொரோனா நிதி வழங்கும் சிறுவர்களுக்கு அற்புத பரிசு; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான போரில் அனைத்து மக்களின் பங்களிப்பையும் மாநில அரசு நாடியுள்ளது. அதாவது அரசு மட்டுமே தனியாக எதையும் சாதித்துவிட முடியாது. பொதுமக்களும் ஒத்துழைப்பும் அவசியம். எனவே முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதியை வழங்கலாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து பல்வேறு பெரு, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், திரைப் பிரபலங்கள், வசதி படைத்தவர்கள், ஏழை மக்கள் உள்ளிட்டோர் நிதி அளித்து வருகின்றனர். அதிலும் சிறுவர், சிறுமியர்கள் பலர் தங்களது சின்னஞ்சிறு சேமிப்புகளை தமிழக அரசுக்கு வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களின் சின்னஞ்சிறு கனவுகளை அடைவதற்காக சிறுக, சிறுக சேமித்து வைத்திருக்கும் சேமிப்பை வழங்க முன்வரும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை என் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது.

எனவே கொரோனா துயர் துடைக்க முதல்வர் பொது நிவாரண நிதிக்காக தங்கள் சேமிப்பை வழங்க முன்வரும் சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட பிள்ளை செல்வங்கள் அனைவருக்கும் தமிழக அரசு சார்பில் உலகப் பொதுமறையாம் திருக்குறள் நூல் அனுப்பி வைக்கப்படும். இளம் உள்ளங்களில் ஈகைப் பண்பையும், சக மனிதர்களை நேசிக்கும் அன்புணர்வையும் விதைத்திடும்


நோக்கத்துடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். அன்னை தமிழ் மண்ணில் அற உணர்வு தழைத்தோங்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தமிழக சிறுவர், சிறுமியர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad