புதிய கல்விக் கொள்கை தொடர்பான மத்திய கல்வி அமைச்சரின் ஆய்வுக் கூட்டம் தள்ளிவைப்பு
இணையவழி கல்வி குறித்து மாநில பள்ளிக்கல்வித் துறைச் செயலர்களுடன் கலந்து ஆலோசிக்கும் நிகழ்ச்சியை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மே 17-ம் தேதி ஏற்பாடு செய்தார். இதில் அமைச்சர் பங்கேற்பது தொடர்பான கோரிக்கைக்கு எந்த பதிலும் வராததால், இக்கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது.
முன்னதாக, உயர்கல்வியில் புதிய தேசிய கொள்கையைஅமல்படுத்துவதற்காக மாநில, மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொக்ரியால் ஆலோசனை நடத்தும் கூட்டம் நேற்று (18-ம் தேதி) திட்டமிடப்பட்டிருந்தது. இக்கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதிலும் மாநில அமைச்சர்கள், உயர்கல்வித் துறை செயலர்களை இணைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்ததால், அதுகுறித்து முடிவு எடுக்கவே தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment