சைலஜா டீச்சர் நீக்கப்பட்டது ஏன்? உண்மையை போட்டு உடைத்த பினராயி விஜயன்
நடந்து முடிந்த கேரள சட்டமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.
பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக உள்ளார். இந்த சூழலில், கேபினட் அமைச்சர்கள் முழுவதுமாக மாற்றப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதில், சுகாதார துறை அமைச்சராக இருந்த சைலஜா டீச்சரும் மாற்றப்பட்டுள்ளார். கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் திறம்பட செயல்பட்டதற்காக சைலஜா டீச்சருக்கு நாடு முழுவதிலும் பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் அவர் கேபினட்டில் இருந்து நீக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சைலஜா டீச்சருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாததற்கான காரணம் குறித்து பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். கேரள கேபினட்டில் சைலஜா டீச்சர் சேர்க்கப்படாதது கட்சி எடுத்த முடிவு என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment