எதிர்க்கட்சித் தலைவர் யார்? எடப்பாடி கை ஓங்குகிறதா? அதிமுகவுக்குள் நடப்பது இதுதான்!
ஆட்சியைப் பறிகொடுத்த பின்னரும் அதிமுகவுக்குள் அதிகார போட்டி குறைந்தபாடில்லை. பிரச்சினைகளை ஓரமாக வைத்துவிட்டு எதிர்க்கட்சித்தலைவரை இன்று தேர்ந்தெடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தமிழகத்தில் 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை மே 11ஆம் தேதி சென்னை கலைவானர் அரங்கில் நடைபெறுகிறது. அதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்வார்கள். நாளை மறுதினம் மே 12ஆம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் சபாநாயகரை சட்டமன்றத் தலைவரான முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து அவரது இருக்கையில் அமரவைப்பது மரபு. கேபினட் அமைச்சருக்கு நிகரான எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பதில்தான் அதிமுகவுக்குள் பூகம்பம் வெடித்துக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment