வருஷத்திற்கு ஒருமுறை வரும் மாம்பழ சீசன்: முதல்வர் அனுமதிப்பாரா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 28, 2021

வருஷத்திற்கு ஒருமுறை வரும் மாம்பழ சீசன்: முதல்வர் அனுமதிப்பாரா!

வருஷத்திற்கு ஒருமுறை வரும் மாம்பழ சீசன்: முதல்வர் அனுமதிப்பாரா!



தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுப்பகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மா விவசாயம் பெரியகுளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மகசூல் தரக்கூடிய இந்த விவசாயத்தில் விளைச்சல் அடைந்து அறுவடை செய்யும் நேரத்தில் கொரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலை காரணமாக முடக்கப்பட்டுள்ளது.

இதனால் விளைந்துள்ள மாங்காய்களை விவசாயிகள் பறித்தாலும் விற்பனை செய்ய முடியாத நிலையில், இந்த ஆண்டும் நோய்த் தொற்றினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


கடந்தாண்டு பொது முடக்கம் காரணமாக விவசாயிகள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்துள்ள நிலையில் இந்த ஆண்டும் தொடர்ந்து மா விவசாயிகள் பெரும் இழப்புகளைச் சந்திக்க வேண்டியாக உள்ளது.


இதைக் கருத்தில் கொண்டு

தமிழக அரசு மாநிலம் முழுவதுமுள்ள பழக்கடைகளைத் திறந்து மாம்பழங்கள் விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தமிழக முதல்வருக்குக் கோரிக்கையாக முன் வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad