தமிழக அமைச்சரவையை அலங்கரிக்கும் திருச்சியை சேர்ந்த இருவர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 6, 2021

தமிழக அமைச்சரவையை அலங்கரிக்கும் திருச்சியை சேர்ந்த இருவர்!

தமிழக அமைச்சரவையை அலங்கரிக்கும் திருச்சியை சேர்ந்த இருவர்!

தமிழக சட்டமன்றத்துக்கு அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில், திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளன.

இந்த வெற்றியை கொடுத்த திருச்சி மக்களுக்கு எதிர் மரியாதை செய்யும் விதமாக, திமுக மூத்த தலைவர் கே.என். நேருவுக்கும், பராம்பரியமாக திமுகவை சேர்ந்த குடும்பத்தில் இருந்து வந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் தமிழக அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 2006 இல் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.


திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பராக அறியப்படும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.


திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்,நேரு, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் பத்மநாபனை வீழ்த்தினார்.

இதேபோன்று திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ப.குமாரை சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அன்பின் மகேஷ் பொய்யாமொழி வென்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad