மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 4, 2021

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்!

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்!


தமிழகத்தில் கடந்த மாதம் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத வகையில், அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் என இந்த முறை ஐந்து முனைப்போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன் தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாளை மாலை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரும் ஸ்டாலினின் பதவியேறு வருகிற 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள ஸ்டாலினை அரசியல் கட்சித் தலைவர் பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள ஸ்டாலின் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad