இந்திய மருத்துவர்களுக்கு போப் ஆண்டவர் புகழாரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 6, 2021

இந்திய மருத்துவர்களுக்கு போப் ஆண்டவர் புகழாரம்!

இந்திய மருத்துவர்களுக்கு போப் ஆண்டவர் புகழாரம்!


இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டிவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 4.12 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சுமார் 3980க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனைகள் நிரம்பி வழிவதோடு மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் கடும் சுமை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு சுமைக்கு மத்தியில் அயராது உழைக்கும் இந்திய மருத்துவ ஊழியர்களுக்கு போப் ஆண்டவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் சபைக்கு போப் ஆண்டவர் அனுப்பியுள்ள செய்தியில், “இந்திய மக்களுடன் மனதார துணை நிற்கிறேன். நோயுற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை காட்டிலும் நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் மருத்துவ ஊழியர்கள்தான் என் எண்ணத்தில் இருக்கின்றனர்.

குறிப்பாக, கொரோனாவால் உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் மக்களுக்கு என் அனுதாபங்கள். மக்களின் உடனடி தேவைகளை சரிசெய்வதற்காக ஏராளமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அயராது உழைத்து வருகின்றனர்.அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவிப்பதுடன் விடாமுயற்சி, பலம் மற்றும் அமைதியை கடவுள் கொடுக்க வேண்டுமென வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad