இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் வழக்கு: மத்திய அரசு விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 26, 2021

இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் வழக்கு: மத்திய அரசு விளக்கம்!

இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் வழக்கு: மத்திய அரசு விளக்கம்
ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிராக தகவல்கள் பகிரப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, ஓ.டி.டி. தளங்கள் உட்பட அனைத்து சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த பிப்ரவரியில் ஒழுங்குமுறை விதிகளை (இந்திய அரசின் இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள், 2021) மத்திய அரசு வெளியிட்டது.

இந்த விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் விதிகளை அமல்படுத்த ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் 6 மாத காலம் அவகாசம் கேட்டிருந்த நிலையில், அந்நிறுவனங்கள் எந்த பதிலும் அளிக்காமல் இருந்தது.

]இதனால் புதிய விதிகளுக்கு இணங்காத அனைத்து சமூக ஊடகங்களுக்கும் தடை விதிப்பது மட்டுமின்றி குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதனிடையே, மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் புதிய ஐடி விதிகளை பின்பற்றும் முடிவில் இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்தது. அதே சமயம் இது தொடர்பாக அரசுடன் சில விஷயங்கள் பற்றி ஆலோசனை செய்ய வேண்டும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனைத்தொடர்ந்து இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகிய இரண்டையும் ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கி விட்டதால், அந்த நிறுவனங்களும் மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

வாட்ஸ் அப்பில் ஒரு செய்தியை முதலில் பரப்பிய நபரை கண்டறியும் வழிமுறையை உருவாக்க மத்திய அரசு கோரியுள்ளது. இது வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் தனிநபர் End-To-End தரவு பாதுகாப்புக்கு எதிரானது என்று தெரிவித்து இந்த வழக்கை வாட்ஸ் அப் நிறுவனம் தொடர்ந்துள்ளது. அத்துடன் பயனாளர்களின் தனியுரிமையை புதிய விதிகள் பாதிக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆனால், புதிய விதிகள் வாட்ஸ் அப்பின் இயல்பான செயல்பாட்டை பாதிக்காது என்றும், குடிமக்களின் தனிப்பட்ட உரிமையை பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. அதேசமயம், பொது ஒழுங்கை உறுதி செய்வதற்கும் தேசிய பாதுகாப்பைப் பேணுவதற்கும் இந்த தகவல்கள் அடங்கிய விதிகள் அவசியம் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad