தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்தாகுமா? நாளை அவசர ஆலோசனை!
சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் மாநில கல்வி பாடத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நாளை முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செயளர் காக்கிலா உஷா, ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷா ராணி ஆகியோர் பங்குபெறுகின்றனர்.
ஆலோசனைக்கு பின் தேர்வு நடைபெறுமா, ரத்தாகுமா என்பது தெரியவரும். பெரும்பாலும் தேர்வு ரத்தாகவே வாய்ப்பு உள்ளது
No comments:
Post a Comment