கோவையில் ஊரடங்கு தளர்வால் மீண்டும் தலைதூக்கும் கொரோனா பேராபத்து!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தாயனூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நியாயவிலைக்கடைகள், இ சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் இன்று (ஜூன் 7ஆம் தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து கடந்த இரு வாரங்களாக அடைக்கப்பட்டிருந்த மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. இந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பினால் தாயனூரில் செயல்பட்டு வரும் வங்கி மற்றும் கடைகளில் பொதுமக்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
பொதுமக்கள் போதிய தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் நிற்பதால் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய அளவில் கொரோனா தொற்றல் சிதைந்த மாவட்டம் என்ற பட்டியலில் இடம்பிடித்துள்ள கோவை இப்போதுதான் மெல்ல மெல்ல மீளத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் தளர்வுகள் காரணமாக ஆபத்து பெருகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
No comments:
Post a Comment