ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்காதீங்க! தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., வலியுறுத்தல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, June 17, 2021

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்காதீங்க! தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்காதீங்க! தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., வலியுறுத்தல்


அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறு அமைக்க, சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறும் பொருட்டு, பொதுமக்களின் கருத்து கேட்பு தேவையில்லை என, 16.1.2020 அன்று, திருத்தப்பட்ட அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கும் பொருட்டும், பொதுமக்களின் கருத்து கேட்புக்கு பின்னரே, இது போன்ற திட்டங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, மத்திய அரசின் அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என, பிரதமருக்கு நான் முதலமைச்சராக இருந்தபோது கடிதம் எழுதினேன்.

இப்படிப்பட்ட நிலையில், இன்று வெளிவந்த ஒரு செய்தியில், அரியலூர் மாவட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு, தமிழக அரசுக்கு, ஓ.என்.ஜி.சி., நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாக தெரிய வருகிறது.


அம்மாவின் அரசு ஆட்சியில் இருந்த போது, தமிழகத்தில், ஓ.என்.ஜி.சி., நிறுவனம் அல்லது இது போன்ற நிறுவனங்கள், ஏதேனும் திட்டங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கவில்லையோ, அது போல், முதலமைச்சரும், அரியலூர் மாவட்ட விவசாயிகள் நலனுக்கு எதிரான, ஓ.என்.ஜி.சி., ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கோரி, தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு, அரசின் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad