மின் கட்டணம் செலுத்த மீண்டும் சலுகை? எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 13, 2021

மின் கட்டணம் செலுத்த மீண்டும் சலுகை? எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்!

மின் கட்டணம் செலுத்த மீண்டும் சலுகை? எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த தேதியில் இருந்து மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் இம்மாதம் (ஜூன்) 15ஆம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் அவகாசம் வழங்கியது. இதற்கிடையில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வந்ததால் மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து வீடுகளில் மின் பயன்பாடு குறித்து கணக்கெடுப்பு நடத்தவில்லை.

மே 2019 மின் கட்டணத்தை செலுத்தலாம்

அதற்கு பதிலாக 2019ஆம் ஆண்டு மே மாத மின் கட்டணம் அல்லது நடப்பாண்டு மார்ச் மாதம் செலுத்திய மின் கட்டணத்தை உத்தேசமாக செலுத்தலாம். இந்த கட்டணம் வரும் ஜூலையில் சரியாக கணக்கிடப்பட்டு முறைபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மே 2019-ன் மின் கட்டணமே இம்மாத கட்டணமாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது அதிகப்படியான கட்டணம் என்று பலரும் குற்றம்சாட்டினர்.

மின்சார வாரியம் புதிய யோசனை

இதற்கு தீர்வு காணும் வகையில் மின்சார வாரியம் புதிய முறையை கையிலெடுத்தது. அதாவது, ஊரடங்கு காலத்தில் தங்கள் மீட்டரில் பதிவாகிய மின் பயன்பாட்டை எழுதியோ அல்லது புகைப்படம் எடுத்தோ வாட்ஸ்-அப் மூலம் அனுப்பினால் அதற்கேற்ற கட்டணம் கணக்கிட்டு தெரிவிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை செய்ய உதவி பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டது.

மேற்குறிப்பிட்ட திட்டம் நன்றாக இருந்தாலும், அது முறையாக செயல்படுத்தப்பட்டதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனெனில் மின் பயன்பாட்டை புகைப்படம் எடுத்து அனுப்பியும் நுகர்வோர்களுக்கு இதுவரை மின் கட்டணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக கட்டணம் தெரியாமல் பலரும் செலுத்தாமல் உள்ளனர். மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad