சென்னையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, June 7, 2021

சென்னையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை!

சென்னையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை!
கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் போதும் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தொடர்ந்து மழைப் பொழிவை பெற்று வந்தன.

இருப்பினும் சென்னை போன்ற வட மாவட்ட மக்கள் கோடை வெயிலால் தவித்து வந்தனர். இந்நிலையில் இந்த வெக்கையை போக்கும் விதமாக சென்னையில் நேற்று நள்ளிரவில் மழை கொட்டித் தீர்த்தது. இடி, மின்னலுடன் இரண்டு மணி நேரம் பெய்த மழையால் வெக்கை தணிந்து குளிர்ச்சி பரவியது.புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, அய்யப்பாக்கம், மதுரவாயல், வளசரவாக்கம், போரூர், வானகரம் மற்றும் மெரினா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

இதே போல் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இரவு நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மற்றும் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. நகரில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சமாக 27 டிகிரி செல்சியசாகவும் வெப்பநிலை பதிவாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு (ஜூன் 8 முதல் ஜூன் 11) வரை மன்னார் வளைகுடா, அரபிக்கடலின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் வங்க கடலின் தென் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அத்துடன் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 9,10) ஆகிய நாட்களில் வங்க கடலின் மத்திய பகுதியில் பலத்த காற்று ( மணிக்கு 40 முதல் 50 கி.மீ ) வேகத்தில் வீசக்கூடும். ஜூன் 11ஆம் தேதி மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வேசும் என்பதால் இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad