ஊரடங்கு தளர்வு.. காரியத்தை கெடுத்த புதிய வைரஸ்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டனில் கடந்த சில மாதங்களாக கடும்
ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஜூன் 21ஆம் தேதியுடன் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
எனினும், டெல்டா வைரஸ் என்றழைக்கப்படும் இந்தியாவில் பரவத் தொடங்கிய உருமாறிய கொரோனா பிரிட்டனிலும் பரவி வருகிறது. இந்த டெல்டா வைரஸால் பிரிட்டனில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்டா வைரஸ் காரணமாக ஊரடங்கு தளர்த்தப்படாமல் போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியாவை உலுக்கியெடுத்த டெல்டா வைரஸ் பிரிட்டனிலும் பரவியுள்ளதால் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்தனர். ஆனால், ஊரடங்கு நிச்சயம் தளர்த்தப்படும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.
இந்நிலையில், ஊரடங்கை முழுமையாக தளர்த்துவது குறித்து இவ்வளவு சீக்கிரம் தகவல் தெரிவிக்க முடியாது என பிரிட்டன் சுகாதார துறை அமைச்சர் மேட் ஹேன்காக் தெரிவித்துள்ளார். டெல்டா வைரஸால் கடும் பாதிப்பு ஏற்படுள்ளதாகவும், ஊரடங்கு தளர்வு குறித்து இப்போது முடிவெடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் கொரோனா சூழல் குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சனும், தானும் ஆய்வு செய்து வருவதாக சுகாதார துறை அமைச்சர் மேட் ஹேன்காக் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment