பிகினி உடையில் கொடி.. சர்ச்சையில் சிக்கிய அமேசான்
கர்நாடக மாநில கொடி மற்றும் சின்னம் அடங்கிய பிகினி உடை
அமேசான் தளத்தில் விற்பனையாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இவ்விவகாரம் கர்நாடக அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமேசான் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கர்நாடக அரசிடம் முன்னாள் முதல்வர் குமாரசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் “அமேசான் நிறுவனம் மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னட மக்களின் உணர்வுகளை அமேசான் புண்படுத்திவிட்டது. கனடாவை சேர்ந்த நிறுவனமான அமேசான், நம் மக்களின் உணர்வுகளுக்கு மரியாதையளிக்க வேண்டும்.
இதேபோன்ற தவறை கூகுள் செய்து, பின்னர் மன்னிப்பும் கேட்டது. இப்போது அமேசானும் மன்னிப்பு கேட்க வேண்டும். சட்டரீதியாக அமேசான் நிறுவனத்துக்கு கர்நாடகம் பாடம் கற்பிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அமேசானின் கனடா இணையதளத்தில்தான் இந்த பிகினி உடை விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அமேசான் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக கலாச்சார துறை அமைச்சர் அரவிந்த் லிம்பவலி தெரிவித்துள்ளார்.
இதேபோல சில தினங்களுக்கு முன் கூகுளும் ஒரு சர்ச்சையில் சிக்கியது. இந்திய மொழிகளிலேயே மிக அசிங்கமான மொழி எது என தேடினால் ‘கன்னடம்’ என கூகுள் முடிவுகளில் பதில் வந்தது. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தபின் கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்டது.
No comments:
Post a Comment