பழனிசாமியை வீடுபுகுந்து வெட்டிய மர்மநபர்கள்: சேலத்தில் பெரும் பதற்றம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 6, 2021

பழனிசாமியை வீடுபுகுந்து வெட்டிய மர்மநபர்கள்: சேலத்தில் பெரும் பதற்றம்!

பழனிசாமியை வீடுபுகுந்து வெட்டிய மர்மநபர்கள்: சேலத்தில் பெரும் பதற்றம்!


சேலம் மாவட்டம் அருகே கத்திகளுடன் வீட்டுக்குள் நுழைந்து, விவசாயியைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடிய கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். படுகாயமடைந்த விவசாயி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலம் பனமரத்துப்பட்டி அருகே குள்ளப்பநாயக்கனூர் பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி. வயது 68. விவசாயி. தனது சொந்த நிலத்திலே விவசாயம் செய்து வருகிறார். இந்த சூழலில் நேற்று இரவு மழை பெய்து கொண்டிருந்ததால், குடும்பத்துடன் பழனிச்சாமி வீட்டுக்குள் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்து உள்ளனர்.

அப்போது வீட்டின் பின்புறம் உள்ள தடுப்பு சுவரைத் தாண்டி முகமூடி அணிந்தபடி 2 கொள்ளையர்கள் கையில் பட்டாக் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்துள்ளனர். அந்த மர்ம நபர்கள் பழனிசாமி குடும்பத்தாரிடம் வீட்டிலுள்ள நகைகள் மற்றும் பணத்தை எடுத்துத் தருமாறு மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்த கொள்ளையர்களின் செயலை தடுத்து நிறுத்தி அவர்களை விரட்ட விவசாயி பழனிச்சாமி முயன்றுள்ளார். அந்த நேரம் கொள்ளையர்கள் கையிலிருந்த கத்தியைக் கொண்டு பழனிசாமியைத் தோள்பட்டை மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டியுள்ளனர். தந்தை வெட்டுப்படுவதைக் கண்ட மகன் சதீஷ்குமார் வீட்டிலிருந்து வெளியே வந்து கத்தி கூச்சலிட்டுள்ளார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பழனிசாமி வீட்டின் முன் கூடினர். சமயத்தில் சுதாரித்துக் கொண்ட 2 கொள்ளையர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து படுகாயமடைந்த பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதற்கிடையே சம்பவம் தொடர்பாக மல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் நடந்த இந்த துணிகர கொள்ளை முயற்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad