அல் கயிதா தலைவர் உயிருடன் இருக்கிறார்.. அதிர்ச்சி ரிப்போர்ட்!
அல் கயிதா அமைப்பை சேர்ந்த பலர் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் தங்கியிருப்பதாகவும், அதில் கயிதா தலைவர் அய்மான் அல் ஜவஹிரியும் இருப்பதாக ஐநா வெளியிட்டுள்ள ரிப்போர்ட்டில் தெரியவந்துள்ளது.
ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான அல் கயிதா தீவிரவாதிகளும், இதர பயங்கரவாத சக்திகளும் தாலிபான்களுடன் சேர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள 12ஆம் அறிக்கையில், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் அல் கயிதா அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் இருப்பதாகவும், அப்பகுதியில் அல் கயிதா தலைவர் அய்மான் அல் ஜவஹிரியும் இருப்பதாக நம்பப்படுகிறது என தெரிவித்துள்ளது.
அல் கயிதா அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவஹிரி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டதாக இத்தனை நாட்களாக நம்பப்பட்டது. இந்நிலையில் அவர் உயிருடன் இருப்பதாக ஐநாவுக்கு தகவல் வந்துள்ளது. எனினும், அவர் மிகவும் பலவீனமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment