‘பிராஜக்ட் O2' ரெடி.. ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு முடிவு கிடைக்குமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 13, 2021

‘பிராஜக்ட் O2' ரெடி.. ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு முடிவு கிடைக்குமா?

‘பிராஜக்ட் O2' ரெடி.. ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு முடிவு கிடைக்குமா?


கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஆக்சிஜன் தேவை மிக அதிகமாக உள்ளது. எனவே, ஆக்சிஜன் விநியோகத்தை சீர்படுத்துவதற்காக பிராஜக்ட் ஓ2 (Project O2) என்ற திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது.

சிறு ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பது, ஆக்சிஜன் கருவிகளை உற்பத்தி செய்வது போன்றவற்றுக்கான பிராஜக்ட் ஓ2 தொடங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா இரண்டாம் அலையால் மருத்துவ ஆக்சிஜனுக்கு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேவை அதிகரித்தது.

இத்திட்டத்தின் கீழ் ஜியோலைட் போன்ற மூலப் பொருள் விநியோகம், சிறு ஆக்சிஜன் ஆலைகளை அமைத்தல், ஆக்சிஜன் கருவிகளை உற்பத்தி செய்தல், வெண்டிலேட்டர் உற்பத்தி போன்றவற்றுக்கு வழிவகை செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், உடனடி தேவைக்கு மட்டுமல்லாமல் நீண்டகால அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் ஆக்சிஜன் ஆலை, கருவிகள், வெண்டிலேட்டர் தேவை குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad