வரும் 14ல் கூடுகிறது புதிய மத்திய அமைச்சரவை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 10, 2021

வரும் 14ல் கூடுகிறது புதிய மத்திய அமைச்சரவை!

வரும் 14ல் கூடுகிறது புதிய மத்திய அமைச்சரவை!



பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், வரும் 14-ம் தேதி புதிய மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மூத்த மத்திய அமைச்சர்கள் 12 பேர் ராஜினாமா செய்ததோடு, புதிதாக 43 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். 15 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 28 பேர் இணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.


இந்நிலையில், டெல்லியில் வரும் 14-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய மத்திய அமைச்சரவையின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கொரோனா தடுப்புப் பணியை தீவிரப்படுத்துவது, அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில், கூடுதல் கவனம் செலுத்துவது, கொரோனா தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad