2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு பணி கிடையாது - அரசு வைத்த ஆப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 10, 2021

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு பணி கிடையாது - அரசு வைத்த ஆப்பு

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு பணி கிடையாது - அரசு வைத்த ஆப்பு


உ.பி. மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா 2021: உத்தரப்பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவுச் சட்டம் இயற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் குறைந்த அளவிலான வளங்கள் இருப்பதால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி அதனை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. அதன்படி,
மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கு உதவ மக்களை ஊக்குவிக்கும் முயற்சியில், உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு கொண்டு வரவிருக்கும் இந்த சட்ட மசோதா மாநில மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சட்டத்தின் சாராம்சங்களாவன, மாநில அரசின் எல்லா நலத்திட்டங்களும் 2 குழந்தைகள் அல்லது அதற்கும் குறைவாக பெற்றுள்ள குடும்பத்துக்கு மட்டுமே சேரும். 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசின் எந்த நலத்திட்டமும் கிடையாது. 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் நிற்க முடியாது. மாநில அரசு பனி கிடைக்காது மற்றும் அரசு பணியில் இருந்தால் பதவி உயர்வும் எவ்வித மானியமும் கிடைக்காது''என கூறப்பட்டுள்ளது.
இந்த சட்ட வரைவு மசோதாவினால் மக்களுக்கு சிறந்த வசதிகள் கிடைக்கக்கூடும் என்று கூறும் முதல்வர் யோகி ஆதித்யநாத், வறுமை மற்றும் கல்வியறிவின்மை ஆகியவை மக்கள் விரிவாக்கத்திற்கு முக்கிய காரணிகள் என்றும் சில சமூகங்களில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு இல்லாமை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆகையால், சமூகத்தை மையமாகக் கொண்ட விழிப்புணர்வு முயற்சிகள் தேவை என்பதனால் இந்த சட்டம் கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad