ஜூலை 16 முதல் பள்ளிகள் திறப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 11, 2021

ஜூலை 16 முதல் பள்ளிகள் திறப்பு!

ஜூலை 16 முதல் பள்ளிகள் திறப்பு!


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் நாடு முழுவதும் மூடப்பட்டன. இதையடுத்து, கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியதும் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், பள்ளிகளில் கொரோனா பரவல் ஏற்பட்டதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

தொடர்ந்து, கொரோனா இரண்டாவது அலையின் கோரதாண்டவம் காரணமாக 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம், 2021-22ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ளது. கொரோனா இரண்டாவது அலையும் குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க அந்தந்த மாநில அரசுகள் திட்டமிட்டு வருகின்றன.தமிழகத்தை பொறுத்தவரை ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளை திறக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளிகள் திறப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர், பெற்றோர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், புதுச்சேரியில் ஜூலை 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று குறைந்து வருவதால் வருகிற 16ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad