சதுரகிரி மலையில் 200 பக்தர்கள் சிக்கி தவிப்பு?: கனமழை காரணமாக இனி செல்ல தடை விதிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

சதுரகிரி மலையில் 200 பக்தர்கள் சிக்கி தவிப்பு?: கனமழை காரணமாக இனி செல்ல தடை விதிப்பு!

சதுரகிரி மலையில் 200 பக்தர்கள் சிக்கி தவிப்பு?: கனமழை காரணமாக இனி செல்ல தடை விதிப்பு!


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, சதுரகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது.
இதற்கிடையே பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் நேற்று சென்றிருந்தனர். தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியதால் பக்தர்கள் அதன்பின் அனுமதிக்கப்படவில்லை.

அதேபோல் 2ஆவது நாளாக இன்று பகலில் மழை இல்லாததன் காரணமாக சதுரகிரி கோயில் மலை ஏற்றத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கபட்டனர். சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தரவுகள்படி ஆயிரத்து 300 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்தனர். இந்நிலையில் 200 பக்தர்கள் மலையில் இருந்துள்ளனர்.

சரியாக இந்த சமயத்தில் வத்திராயிருப்பு மற்றும் சதுரகிரி மலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதையடுத்து சதுரகிரி மலைப்பகுதியில் கோயிலில் 200 பக்தர்களும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.



இந்த தகவாலை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மழையின் காரணமாக நாளை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad