இத்தாலிக்காரர் உலக சாதனையை முறியடித்த விருதுநகர் 23 வயது இளைஞர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 8, 2021

இத்தாலிக்காரர் உலக சாதனையை முறியடித்த விருதுநகர் 23 வயது இளைஞர்!

இத்தாலிக்காரர் உலக சாதனையை முறியடித்த விருதுநகர் 23 வயது இளைஞர்!


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். வயது 23. இந்த வாலிபர் உலக சாதனை செய்ய வேண்டும் என்ற ஆசை உடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து ஸ்கிப்பிங் செய்து நோபல் சாதனை படைத்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது அதிக ஜம்பிங் ஜாக்ஸ் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து பயிற்சி செய்து வந்துள்ளார்.

இதையடுத்து இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரத்து 873 முறை அதிக ஜம்பிங் ஜாக் செய்து சாதனை ஒன்றை உருவாக்கி வைத்துள்ளார். இந்த இத்தாலிக்காரர் சாதனையை முறியடிக்கும் நோக்கத்தில் ஐயப்பன் ஒரு மணி நேரத்தில் 4 ஆயிரத்து 483 முறை அதிவேகமாக ஜம்பிங் ஜாக் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

சாதனையை நிகழ்த்திய கல்லூரி நிர்வாகிகள் மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு அரசு தனக்கு உதவி செய்தால் இது போன்று பல சாதனைகள் செய்து நமது மாநிலத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பேன் எனச் சாதனை இளைஞர் ஐயப்பன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad