டெல்டாவை விட கொடூரம்: 30 நாடுகளில் பரவிய லாம்ப்டா வேரியண்ட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

டெல்டாவை விட கொடூரம்: 30 நாடுகளில் பரவிய லாம்ப்டா வேரியண்ட்!

டெல்டாவை விட கொடூரம்: 30 நாடுகளில் பரவிய லாம்ப்டா வேரியண்ட்!


Vகடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வந்த நிலையில், ஒவ்வொரு நாடுகளும் இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு போடும் பணிகள் நடைபெற்று வருவதற்கிடையே, கொரோனா 2ஆவது, 3ஆவது அலைகள் தாக்கிக் கொண்டிருக்கின்றன.

கொரோனா 3ஆவது அலை அக்டோபரில் உச்சகட்டமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், இந்திய உட்பட பல்வேறு நாடுகள் 3ஆவது அலை எதிர்க்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதேசமயம், கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் போது, அவை தனக்குள்ளேயே சில மாற்றங்களை செய்து கொள்கிறன. இதற்கு மரபணு பிறழ்வு - Mutation என்று பெயர். இதுபோன்று பல்வேறு மரபணு பிறழ்வுகள் ஒன்றிணையும் போது, அதிலிருந்து ஒரு புதிய கொரோன வரஸ் திரிபு - Variant உருவாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்று பல்வேறு வகையான வேரியண்ட்களும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவில் டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனா என அடுத்தடுத்து உருமாறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், டெல்டா வகைகளை விட ஆபத்தான உருமாறிய ‘லாம்ப்டா’ என்ற புதிய வைரஸ் வேரியண்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரு நாட்டில்தான் இந்த வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு பெருவில் மே மற்றும் ஜூன் மாதங்களில் 82% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பான் அமெரிக்க சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் தற்போது இங்கிலாத்திலும் பரவி உள்ளதாக இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று இங்கிலாந்து வந்த 6 பேருக்கு இந்த வைரஸ் உறுதியாகி உள்ளது. இந்த வைரசுக்கு இதுவரை இந்தியாவில் யாரும் பாதிக்கப்பட்டுள்ளதாக எந்த பதிவும் இல்லை. கடந்த 4 வாரத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. இது, விரைவில் மேலும் பல நாடுகளுக்கு பரவும் என அஞ்சப்படுகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad