இங்கிலாந்து செல்வோர் கவனத்துக்கு: முக்கியத் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

இங்கிலாந்து செல்வோர் கவனத்துக்கு: முக்கியத் தகவல்!

இங்கிலாந்து செல்வோர் கவனத்துக்கு: முக்கியத் தகவல்!

இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இம்மாதம் 19ஆம் தேதி ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படவுள்ளது. இதற்கு பின், மக்கள் விருப்பம் இருந்தால் மட்டும் மாஸ்க் அணிந்துகொள்ளலாம் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பயணக் கட்டுப்பாடுகளை மேலும் சில தளர்வுகளை அளிக்க பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளில் இருந்து பிரிட்டன் வருபவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
தற்போதைய விதிமுறையின்படி, அனுமதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பிரிட்டன் வருபவர்கள் 10 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அந்நாட்டுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போது அதனை மீட்டெடுக்கும் நோக்கில் மேற்கண்ட தளர்வுகள் அளிக்கப்படவுள்ளன.
அதேசமயம், வெளிநாடுகளில் இருந்து பிரிட்டன் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போட நிலையில், பயணிகளுடன் வரும் அவர்களை எப்படி தனிமைப்படுத்துதல் இல்லாமல் அனுமதிப்பது என்பன உள்ளிட்டவைகளை அந்நாட்டு அரசு தெளிவுபடுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த தளர்வுகள் இம்மாத கடைசியில் இருந்து அமலுக்கு வரும் என தெரிகிறது.
பிரிட்டனில் 65 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டு விட்டது. எஞ்சியவர்களுக்கு போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 15 மாதங்களாக அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளால் அந்நாட்டில் பயணத் தொழிலை சார்ந்து இருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad