பள்ளிகள் திறப்பு: இப்போதைக்கு முடிவு வராது போல... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 16, 2021

பள்ளிகள் திறப்பு: இப்போதைக்கு முடிவு வராது போல...

பள்ளிகள் திறப்பு: இப்போதைக்கு முடிவு வராது போல...



தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஜூலை 19ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், ஜூலை 31 வரை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் கீழ்கண்ட செயல்பாடுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுவதாகவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 31 வரை தடை:

மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக),
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்து, திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்

பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றிற்கு தமிழகத்தில் தொடர்ந்து தடை நீட்டிக்கப்படுகிறது.

இதில்,

பள்ளி, கல்லூரிகளை திறப்பதில் தொடர்ந்து தடை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வெகுவாக குறைந்து கட்டுக்குள் வந்துள்ள நிலையில் பள்ளிகளை திறக்கக்கோரி தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.


இந்நிலையில், பள்ளிகளை திறப்பதை குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதனிடையே, ஜுலை 19 ஆம் தேதி காலை 11 மணிக்கு

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது. இந்நிலையில், அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு அறிவிப்பில் பள்ளிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டிருப்பது, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நடத்திய ஆலோசனையில் முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்பதே தெரிகிறது. இந்நிலையில், பள்ளிகளை திறப்பதை குறித்து ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad