பாஜகவில்தான் உண்மையான சமூக நீதி இருக்காம்... கட்சியின் புது தலைவர் அண்ணாமலை பெருமிதம்!
தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை, இன்று கமலாலயத்தில் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியது:
எங்கள் கட்சி வித்தியாசமானது. எனது அனுபவம் குறைந்ததாக இருக்கலாம். இந்தக் கட்சியை தொண்டர்கள் உயிரைக் கொடுத்து வளர்த்திருக்கின்றனர். திருமணம் ஆகாமல் 90 வயதுவரை கட்சியை வழிநடத்தியவர்கள் இருக்கின்றனர். இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்குக் கொடுத்திருப்பதால், நன்றாகப் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
சட்டப்பேரவையில் நயினார் நாகேந்திரன் சிங்கம் போலக் குரல் கொடுத்திருக்கிறார். அவர்களுக்கெல்லாம் உறுதுணையாக இருந்து கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம்.
No comments:
Post a Comment