தன் மீது அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கும் ராசிகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 8, 2021

தன் மீது அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கும் ராசிகள்!

தன் மீது அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கும் ராசிகள்!


என்ன தான் நல்ல வேலையாக இருந்தாலும், தன்னுடன் வேலை பார்க்கும் நபர்கள் நம்மை மதிக்கவில்லை, அல்லது கண்டுகொள்வதில்லை என்றால் நமக்கு ஒருவித மந்தநிலையும், பாகுபாடும் ஏற்பட்டுவிடும்.
ஆனால் சில ராசியினரோ மற்றவர்கள் நன்றாக பழகினாலும், தன்னை மட்டும் அனைவரும் கவனிக்க வேண்டும், முன்னிறுத்த வேண்டும் என நினைப்பவர்களும் உண்டு.

வேலை தொடர்பான பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் சிலர் எப்போதும் தன்னையே கவனிக்க வேண்டும் என நினைப்பார்கள். கவனத்தை ஈர்க்க உண்மையில் சரியான திறமை அல்லது அதற்கான ஆளுமை இருக்க வேண்டும். ஆனால் சிலரோ எப்படியேனும் தன் மீது கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் பைத்தியக்காரத்தனமான செயல்களைக் கூட செய்வார்கள்.

உதாரணத்திற்கு விருந்து நிகழ்வில் கலந்து கொள்ளும் நபர் தன் மீது கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் விருந்தில் கலந்து கொள்ளாமலும் இருப்பார். அல்லது அங்கு வந்து மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வித்தியாசமான செயலை செய்யவார். ஒருவேளை மற்றவர்கள் கவனிக்காவிடில் சாப்பாட்டை புறக்கணிப்பது, சாப்பாட்டைத் தூக்கி எறிவது என மூர்க்கத்தனமாகவும் செயல்படுவார்கள்.

சிலர் தங்களின் பணியிடத்தில் மற்றவர்களை ஈர்க்க, கவனிப்பை திறப்ப சத்தமாக பேசுதல், வித்தியாசமான செயல்களில் ஈடுபடுதல் என முயல்வார்கள். அப்படி முயற்சிக்கும் ராசிகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சிம்மம்

நவகிரக தலைவன் கவனத்தை ஈர்ப்பதை நேசிக்கக்கூடியவர்கள். தன் மீது கவனம் ஈர்க்க பைத்தியக்காரத்தனமாக எதையும் செய்யமாட்டார்கள். இருப்பினும் மற்றவர்களின் கவனத்தை திருப்ப அழகான மற்றும் உயிரோட்டமான ஆளுமையுடன் கவனத்தை ஈர்க்கிறார்கள். மற்றவர்களை எளிதில் ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்கள்.
மேஷம்

மேஷ ராசியினர் இந்த விஷயத்தை ஒரு போட்டியாகவே பார்க்கின்றனர். மற்றவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தன் மீதான கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கின்றனர். மேஷம் எல்லாவற்றையும் ஒரு போட்டியாக எடுத்துக்கொண்டு விஷயங்களை வென்றெடுக்க முனைவார்கள். எனவே, கவனத்தை ஈர்க்கும் விஷயத்திலும், அவர்கள் வெற்றிபெற தங்கள் சக்தியால் ஆன எல்லாவற்றையும் செய்வார்கள்.

மிதுனம்

மிதுன ராசியினர் ஒரு சமூக பட்டாம்பூச்சி போல மற்றவர்களின் கவன வெளிச்சத்தில் இருப்பதை விரும்புபவர்கள். இவர்களின் பேசும் திறமை மற்றும் நகைச்சுவை உணர்வு காரணமாக பெரும்பாலும் மக்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள். மேலும் சுவாரஸ்யமாக உரையாடி மற்றவர்களின் கவனத்தை சிறைபிடிப்பதோடு, அவர்களை சலிப்படையாமலும் பார்த்துக் கொள்வர்.

​தனுசு

தனுசு ராசியை சேர்ந்தவர்கள் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நினைப்பவர்கள். இருப்பினும் இந்த குணம் இது ஒரு மோசமான விஷயம் இல்லை. ஏனெனில் இந்த விஷயம் அவர்களை சுயநலவாதிகளாகவோ அல்லது சுய-வெறித்தனமாகவோ ஆக்குவதில்லை, இதன் பொருள் அவர்கள் உண்மையிலேயே சுய-அன்பை பெற வேண்டும் என்பதாகும். மற்றவர்களின் அன்பைப் பெற நினைக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad