"நீங்க சொல்லுங்க!" - செய்தியாளரிடம் பதில் கேட்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 16, 2021

"நீங்க சொல்லுங்க!" - செய்தியாளரிடம் பதில் கேட்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பா!

"நீங்க சொல்லுங்க!" - செய்தியாளரிடம் பதில் கேட்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பா!



செய்தியாளர்கள் சந்திப்பில், கேள்வி கேட்ட செய்தியாளரிடம் கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா பதில் கேட்டது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தலைநகர் டெல்லிக்கு சிறப்பு விமானம் மூலம் வந்த, பா.ஜ.க.,வைச் சேர்ந்த கர்நாடக மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக அரசுடன் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, கர்நாடக மாநில வளர்ச்சித் திட்டங்கள், கர்நாடக பா.ஜ.க., உட்கட்சி நிலவரம், மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களை கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா சந்தித்தார். அப்போது, கர்நாடக மாநிலத்தில் தலைமை மாற்றமா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் எடியூரப்பா, தலைமை மாற்றம் குறித்து எந்தவொரு வதந்தியும் தனக்குத் தெரியாது என்றும், உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் என சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.

நாளை பெங்களூருவுக்கு திரும்பும் கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க., தேசியத் தலைவர் நட்டா, ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad