பதக்கம் வாங்கிட்டுத்தானே வருவீங்க? ஒலிம்பிக் வீரர்களுக்கு ஸ்டாலின் கேள்வி!
ஜப்பான் நாட்டின், டோக்கியோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் காணொலிக் காட்சி மூலமாக கலந்துரையாடினார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியில் நீங்கள் கலந்துகொள்ள இருக்கிறீர்கள் என்பதை நினைக்கும்போதே உங்களுக்கு எத்தகைய பெருமை இருக்கிறதோ - அதேபோல் எனக்கும் பெருமையாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் வெற்றி பெற்று பதக்கங்களோடுதான் தமிழ்நாட்டுக்கு வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது. பதக்கம் வாங்கிட்டுத்தானே வருவீங்க? என்னோட நம்பிக்கையும் மக்களோட நம்பிக்கையும் அதான்!” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “உங்கள் திறமை உலகம் பாராட்டும் வகையில் இருக்கிறது. வெற்றிபெற வேண்டும் என்பதற்காக விளையாடுபவர்கள் நீங்கள்! நீங்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளப் போகிறீர்கள் என்பதுதான் பலருக்குத் தெரியும். ஆனால் இந்த இடத்தை அடைவதற்காக நீங்கள் இதுவரை எடுத்துக்கொண்ட பயிற்சிகள், அடைந்த துயரங்கள், வேதனைகள் அவர்களுக்குத் தெரியாது. உங்களில் பலருக்கும் வறுமை சூழ்ந்த வாழ்க்கையாக இருந்தாலும், விளையாட்டுப் போட்டிகளின் மீது உங்களுக்கு இருந்த ஆர்வமும், உங்கள் திறமை மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையும்தான் உங்களை இந்த உயரத்துக்கு அழைத்து வந்துள்ளது” என்ரார்.
No comments:
Post a Comment